ருசியான மேத்தி புலாவ் இந்த மாதிரி செஞ்சு பாருங்க பின் அடிக்கடி நீங்களே செய்வீங்க!

Summary: நீங்க எல்லாரும் புலாவ் சாப்பிட்டிருப்பீங்க,. ஆனால், எந்த சுவையான மேத்தி புலாவ்  சாப்பிட்டிருக்கிறீர்களா? மேத்தி புலாவ் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.. மேத்தி புலாவ் என்பது வெந்தயக்கீரை கொண்டு தயாரிக்கப்படுகிறது, ஆகையால் மேத்தி புலாவ்  ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேத்தி புலாவ் வீட்டிலேயே எளிதாக செய்யலாம். மதிய உணவில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கலாம். அனைவரும் விரும்பி உண்பார்கள். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 2 கப் பாசுமதி அரிசி
  • 1 கப் நறுக்கிய தக்காளி
  • 1/2 கப் புதினா
  • 1 கப் தேங்காய்ப்பால்
  • 1 கப் நறுக்கிய வெந்தயக் கீரை
  • 1/4 கப் நறுக்கிய கொத்தமல்லி
  • 3/4 கப் வெங்காயம்
  • 3 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • கிராம்பு, பிரிஞ்சி இலை
  • 4 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • ஏலக்காய்
  • பட்டை
  • உப்பு

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. வாணலியில் அல்லது குக்கரில் எண்ணெய் சூடானதும் , ஏலக்காய், பட்டை, கிராம்பு தாளிக்கவும்.
  2. இதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, கீரைகள், கரம் மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்.
  3. வதங்கியதும் பாசுமதி அரிசியையும் போட்டு வதக்கி 4 கப் தண்ணீர், தேங்காய்பால், உப்பு போட்டு நன்கு கிளறி வேக விடவும். குக்கரில் 2 விசில் வந்ததும் மேதி புலாவ் பரிமாற ரெடி!