காரசாரமான சின்ன வெங்காய புளி குழம்பு செய்வது எப்படி ?

Summary: சின்ன வெங்காயம் பளி குழம்பு வைக்க நாமமே செய்த ஒரு குழம்பு மசாலா பொடி சேர்த்து செய்யும் போது இதன் சுவையும் மணமும் இன்னும் கூடுதலாகவே இருக்கும். இப்படி இந்த முறையில் நீங்கள் சின்ன வெங்காய புளிக்குழம்பு செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பறிமாறினால் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஓரு புளிகுழம்பாக இருக்கும். ஆகையால் இன்று இந்த சின்ன வெங்காய புளிக்குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2 tbsp தேங்காய் எண்ணெய்
  • 2 tbsp தனியா
  • 8 காய்ந்த மிளகாய்
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 2 tbsp தேங்காய் எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • 1 tbsp ஊளுந்த பருப்பு
  • 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  • 10 முழு சின்ன வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 5 பல் பூண்டு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 2 tbsp மிளகாய் தூள்
  • அரைத்த மசாலா பொடி
  • ½ கப் புளி கரைசல்
  • 1 கப் தேங்காய் பால்
  • 1 கப் தண்ணீர்
  • உப்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் புளிக்குழம்பு மசாலா அரைக்க ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி, அதில் 2 டீஸ்பூன் தனியாக சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். பின் தனியாவை ஒரு பவுளில் தனியாக எடுத்து கொள்ளவும்.
  2. பின்பு அதே கடாயில் எட்டு காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து அதையும் தனியா உடன் சேர்த்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதனுடன் அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து அதையும் மீத பொருட்களுடன் சேர்த்து குளிர வையுங்கள்.
  3. அனைத்து பொருட்களும் நன்றாக குளிர்ந்தவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  4. கடுகு நன்றாக பொரிந்தவுடன் நம் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து சிறிது நேரம் வதக்கி கொண்டு. பின் இதனுடன் தோலுரித்த முழு சின்ன வெங்காயமும் அதனுடன் பூண்டு பற்களையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  5. அதன் பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் நாம வறுத்து அரைத்த பொடியையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். அனைத்து பொருட்களும் நன்றாக வெந்ததும் அரைக்கப் புளிக்கரைசல் ஊற்றி வதக்கிக் கொள்ளவும்.
  6. பினபு இரண்டு நிமிடம் நன்றாக வதக்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கிளறி விடுங்கள். குழம்பு நன்றாக கொதித்து வந்ததும் இதனுடன் ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு குழம்பு இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான சின்ன வெங்காய புளிக்குழம்பு தயாராகிவிட்டது.