மொறு மொறுனு டீ கடை கஜடா இப்படி செய்து பாருங்க! அதன் ரகசியம் இது தான்!

Summary: மாலையில் ஒரு கப் தேநீருடன் சிற்றுண்டிகளை அனுபவிப்பதை விட சிறந்தது எதுவுமில்லை. நீங்கள் எப்பொழுதும் வித்தியாசமான மற்றும் எளிதாகத் தயாரிக்க விரும்புகிறீர்கள் என்றால், சுவையான கஜடாவை நீங்கள் முயற்சி செய்யலாம். பொதுவாக நாம் டீ கடைக்கு சென்றால் டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய ஒரு சுவையான தின்பண்டம் கஜடா. டீ-க்கடை ஸ்நாக்ஸுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதில் இனிப்பு சுவை கொண்ட கஜடா அலாதியான சுவை கொண்டது. இது மாலை நேரங்களில் டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ். மிகவும் சுவையாகவும் மொறு மொறுப்பாகவும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாக இருக்கும்.

Ingredients:

  • 1 கப் மைதா
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் ரவை
  • 1/4 கப் தயிர்
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/2 கப் பால்
  • 2 சிட்டிகை சமையல் சோடா
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 சிட்டிகை உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, ரவை, சமையல் சோடா, உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு மிக்ஸியில் சக்கரை, ஏலக்காய் இரண்டையும் சேர்த்து பவுடராக்கி கொள்ளவும். பிறகு எடுத்து வைத்திருக்கும் தயிரை சர்க்கரை தூளுடன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. பின்னர் சக்கரை தயிர் கலவையை மைதா மாவுடன் சேர்த்து நன்கு கலந்து பிசையவும்.
  4. பிறகு கொஞ்சம் பால் தெளித்து பிசையவும், அத்துடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து ஒரு மூடி போட்டு மூடி 10 நிமிடம் வைக்கவும்.
  5. பிறகு உங்கள் விருப்பத்திற்கேற்ப, பெரியதாகவோ, சின்னதாகவோ உருண்டையாக உருட்டி கொள்ளவும்.
  6. பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து உருண்டைகளை ஒவொன்றாக எண்ணையில் போட்டு திருப்பி விட்டு வறுக்கவும்.
  7. நன்கு வெந்து பொன்னிறமானதும் நன்றாக உப்பி, எல்லா பக்கவும் அழகா வெடிச்சு வரும் பொழுது எண்ணையில் இருந்து எடுத்து விடவும்.
  8. அவ்வளவுதான் அருமையான தோற்றத்தில் கஜடா தயார். முட்டை சேர்த்து செய்ததுபோல் உள்ளே சப்டா, வெளியில் மொறு மோறுப்பாக மிக சுவையாக இருக்கும்.