சுவையான கருனைக்கிழங்கு மசியல் கூட்டு இப்படி செய்து பாருங்க ? மதிய உணவுக்கு ஏற்றது!

Summary: பந்தியில் சாதம், குழம்பு, பொரியல், கூட்டு, அவியல், என்று பலவிதமான வகைகள் வைக்கப்படும். அதிலும் கல்யாண வீட்டு பந்தியில் வைக்கப்படும் சுவையான கருணைக்கிழங்கு மசியல் பற்றி தான் பார்க்கபோகிறோம். இவை வீட்டில் செய்யும் சுவையை விட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த பொரியலை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

Ingredients:

  • ¼ KG கருனைக்கிழங்கு
  • புளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய் தூள்
  • உப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கைப்பிடி  கொத்தமல்லி
  • 2 tsp எண்ணெய்
  • 1 tsp கடுகு
  • 2 வர மிளகாய்
  • ½ tsp வெந்தயம்
  • 1  tsp சீரகம்

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்து கொண்ட கருணைக் கிழங்கின் தோல் பகுதியை சீவி எடுத்து கொள்ளவும். பின் அரிசி களைந்த நீரை குக்கரில் சேர்த்து அதில் கருனைக்கிழங்கை வேக வைக்கவும்.
  2. பின் கருனைக்கிழங்கு நன்கு வெந்ததும் கிழங்கை குளிர வைத்து பின் கிழங்கு நன்கு ஆறியதும் கையால் நன்கு மசித்து கொள்ளுங்கள். பினா புளியை நன்கு கரைத்து வடிகட்டி புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும்.
  3. அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு வர மிளகாய், அரை டீ ஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
  4. பின் இந்த தாளிப்புடன் புளி கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மசித்த கருனைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாயத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வையுங்கள்.
  5. பின் நன்கு கொதித்ததும் குழம்புப் பதத்தில் இறக்கினால் பத்து நிமிடங்களில், கூட்டுக்கும் குழம்புக்கும் இடைப்பட்ட பதத்தில் இறுகிவிடும். மேலே கொத்தமல்லித் தழை தூவி பரிமாறலாம். அவ்வளவு தான் கருணைக் கிழங்கு மசியல் தயார்.