சுட சுட தினை பருப்பு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் ருசியே தனி தான்!

Summary: தினை என்பது பல்துறை தானியமாகும், இது அனைவருக்கும் மிகவும் நல்லது மற்றும் கால்சியம், மெக்னீசியம், பி-வைட்டமின்கள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களின் அருமையான ஆதாரமாகும். சிறுதானிய வகைளை நாம் அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு சாதத்தை எல்லோரும் விரும்பி உண்பர். பருப்பு சாதம் கோவை மாவட்டத்தின் பாரம்பரியம் மிக்க உணவுவகை . இது மிகவும் எளிமையான மற்றும் ஆரோக்கியமான சாதம். இதனை பிரஷர் குக்கரில் செய்யலாம். இது விரைவாக செய்யக் கூடிய உணவு.

Ingredients:

  • 1 கப் தினை
  • 1/4 கப் பாசிப்பருப்பு
  • 1 பச்சை மிளகாய்
  • 4 பல் பூண்டு
  • 3 சின்ன
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • உப்பு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 வரமிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 குக்கர்

Steps:

  1. தினை அரிசி மற்றும் பருப்பை சுத்தம் பண்ணி வைத்துக் கொள்ளவும்.
  2. பின் குக்கரில் 3 பங்கு தண்ணீர் வைத்து பருப்பு, தினை அரிசி போட்டு, மஞ்சள்பொடி, பெருங்காயப்பொடி, வெங்காயம், பூண்டு,பச்சைமிளகாய் சேர்த்து வேக வைக்கவும்.
  3. ஒரு விசில் வந்ததும் சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து பின் இறக்கவும்.நன்கு குழைவாக இருக்க வேண்டும்.
  4. பின்பு சிறிது உப்பு சேர்க்கவும். இப்போது வேறு வாணலியில் 3ஸ்பூன் நெய் சேர்த்து கடுகு, உளுந்தம்பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து சாதத்தில் சேர்க்கவும்.
  5. தினை அரிசி பருப்பு சாதம் ரெடி. கூழ்வடகம்,வெங்காய வடகம், சேவு வைத்து சாப்பிடலாம்.ரொம்ப நன்றாக மணமாக இருக்கும்.