கிராமத்து பாட்டி ஸ்டைலில் உளுந்த வடை எப்படி செய்வது ?

Summary: நமது உணவு வகைகளில் பாரம்பரிய காலங்களில் இருந்து உளுந்த வடை இடம்பெற்று வருகிறது. இந்த உளுந்த வடையை நாம் காலை டிபன் நேரங்களிலும் அல்லது மாலை நேரங்களில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் மாதிரியாகவும் செய்து கொடுக்கலாம். அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இன்று இந்த மொறு மொறுப்பான உளுந்த வடையை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 கப் வெள்ளை உளுந்து
  • 10  மிளகு
  • 3 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ¼ tbsp பெருங்காய தூள்
  • தண்ணீர்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 2 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. உளுந்த வடை செய்வதற்கு தேவைப்படும் முக்கிய பொருளான வெள்ளை உளுந்து ஒரு கப் எடுத்துக் கொண்டு ஒரு பெரிய பவுலில் சேர்த்து இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்றாக அலசி கொண்டு, மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து நான்கு மணி நேரங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பிறகு நான்கு மணி நேரம் ஊறிய வெள்ளை உளுந்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொண்டு, மையாக மாவு போல் அரைத்துக் கொண்டு. அரைத்த உளுந்து மாவை ஒரு பெரிய பவுளில் எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின் அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகு, நறுக்கிய ஒரு கொத்து கருவேப்பிலை, கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
  4. தற்சமயம் தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது அளவு மட்டும் சேர்த்துக் கொண்டு மாவை நன்றாக கலந்து கொள்ளவும். மாவை தயார் செய்யும் போது மாவை அடியில் இருந்து கிளறி விட வேண்டும். பின்பு ஒரு பவுலில் தண்ணீர் நிரப்பி அதில் சிறிது அளவு மாவை எடுத்துப் போடுங்கள் மாவு தண்ணீர் மேல் மிதந்தால் வடை சுடும் பதத்தில் உள்ளது
  5. பின்பு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு கை மாவு எடுத்துக் கொண்டு இரண்டு முறை நன்றாக உருண்டை பிடிப்பது போல் கையாட்டி பின் பெருவிரலால் நடுவில் துளையிட்டு அப்படியே கடையில் போட்டுக் கொள்ளுங்கள்.
  6. பின்பு உளுந்த வடை இருபுறவும் நன்றாக சிவக்கும் வரை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு மீதும் இருக்கும் உளுந்த வடையையும் பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் மிகவும் மொறு மொறுப்பான தன்மை உடன் உளுந்த வடை தயாராகிவிட்டது.