மதிய உணவுக்கு இனி உருளைக்கிழங்கு பொரியல் கூட்டு இப்படி செய்து பாருங்க!

Summary: உருளைக்கிழங்கு என்றால் யாருக்கு தான் பிடிக்காது? பிடிக்காத குழம்பு, சாதம் என்றாலும் உருளைக்கிழங்கு பொரியல் இருந்தால் பிடிக்காத உணவும் சாப்பிடுவாங்க. அந்தவகையில் பெல்லாரி முறையில் இது போன்று ஒரு முறை உருளைகிழங்கு பொரியல் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க எல்லோரும் மீண்டும், மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. பெல்லாரி பொரியல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 3 பச்சை மிளகாய்
  • 2 வர மிளகாய்
  • கருவேப்பிலை
  • 4 பல் பூண்டு
  • இஞ்சி
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 4 உருளைக்கிழங்கு
  • எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் கான்ப்ளவர் மாவு
  • உப்பு
  • 1 டீஸ்பூன் தனியா பொடி
  • ¼ டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டீஸ்பூன் பெப்பர்

Equipemnts:

  • Q கடாய்

Steps:

  1. முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்கு கோர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து நறுக்கிய உருளைக்கிழங்கை ஒரு பௌலில் போட்டு அத்துடன் கான்ப்ளவர் மாவு மற்றும் உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
  3. அதே வாணலில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  4. பச்சை வாசனை போனதும் அத்துடன் தனியா பொடி, கரம் மசாலா, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி அதன் மேல் பெப்பர் பொடி சேர்த்து கலந்து பரிமாறவும்.