கொத்தமல்லி சட்னி இனி இப்படி செய்து பாருங்க! 3 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Summary: எப்பொழுதும் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி என்று சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்துவிட்டது என்றால் அப்பொழுது உங்களுக்கான பதிவு தான் இது கொத்தமல்லி சட்னி சுவையாகவும், சுலபமாகவும் இனி இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க அப்றம் மீண்டும் மீண்டும் இந்த சட்னி தான் சாப்பிட தோன்றும். இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • தேங்காய்
  • 7 பல் பூண்டு
  • கொத்தமல்லி
  • 3 பச்சை மிளகாய்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • 2 வர மிளகாய்
  • கருவேப்பிலை
  • 2 டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு மிக்சியில் தேங்காய், பொட்டு கடலை, கொத்தமல்லி, பூண்டு, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்.
  2. அதன் பின்பு தாளிப்பதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும கடுகு, வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  3. தாளித்து முடித்தவுடன் நாம் மிக்ஸியில் மையாக அரைத்து வைத்துள்ள சட்னியை ஊற்றி நன்கு கிளறி விட்டு கொள்ளுங்கள்.
  4. பினா சட்னி உங்களுக்கு தண்ணியாக வேண்டும் என்றால் மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி அலசி சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
  5. அவ்வளவு புது விதமான கொத்தமல்லி சட்னி தயாராகிவிட்டது, இதனுன் இட்லி, தோசை வைத்து சாப்பிடுவதற்கு பக்காவாக இருக்கும்.