வாயில் வைத்த உடன் கரையும் நெய் மைசூர் பாக் செய்வது எப்படி ?

Summary: பெரும்பாலான நபர்களும் முதலில் சாப்பிட விரும்பு ஸவீட்ஸ் என்றால் மைசூர் பாகு தான் அதிலும் நெய் மைசூர்பாகு என்றால் கொள்ளை பிரியம். அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இந்த நெய் மைசூர் பாகு இருக்கும். இன்று இந்த நெய் மைசூர்பாகு எப்படி செய்வது என்பது பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். இது போன்று நீங்களும் உங்க வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த நெய் மைசூர் பாக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்வீட் ரெசிபியாக மாறி போகும் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 கப் கடலை மாவு
  • 2 கப் நெய்
  • ½ கப் சர்க்கரை
  • ½ கப் தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 சிறிய பாத்திரம்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு கப் அளவிற்கு கடலை மாவு சேர்த்து தீயை மிதமாக எரிய விட்டு நன்கு வறுத்து எடுங்கள். கடலை மாவு நன்கு வறுபட்டு மனம் வரத் தொடங்கும் அதுவரையிலும் நான்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு கடாயை கீழே இறக்கி வைத்து கடலைமாவை குளிர வைத்துக் கொள்ளவும், பின்பு வறுத்த கடலை மாவை ஒரு பெரிய பவுளில் சலித்து சேர்த்துக் கொண்டு. சலித்த பின் இருக்கும் கட்டிகளையும் உடைத்து விட்டு திரும்ப சலித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
  3. பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுடன் இரண்டு கப் அளவிற்கு நெய் சேர்த்து நெய் உருகும் வரை மட்டும் அடுப்பில் வைத்து உடனே இறக்கி விடுங்கள். பின்பு நாம் சலித்து வைத்திருக்கும் கடலை மாவுடன் சிறிது சிறிதாக நெய் ஊற்றி பேஸ்ட் போல் கரைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் அரை கப் அளவிற்கு சர்க்கரை அரை கப் அளவு தண்ணீரும் சேர்த்து கிளறி விடுங்கள். சர்க்கரை பாகு நுரை போல் கொதித்து வரும் பொழுது பிசுபிசு என்ற பதத்திற்கு வந்தவுடன் நாம் கரைத்து வைத்திருக்கும் கடலை மாவையும் கடாயில் சேர்த்துக் கொண்டே கிளறி விடுங்கள்.
  5. பின் கடலை மாவு வேக ஆரம்பித்தவுடன் சிறிது நெய் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். பின் கடலை மாவு வேகும் போது நெய் உறியும் அதனால் மறுபடியும் நெய் சேர்த்தூ கிளறி விடுங்கள். இந்த நெய்யும் கரைந்தவுடன் பின்பு கடைசியாக மீதம் இருக்கும் நெய்யையும் ஊற்றி நன்றாக கிளறி விடுங்கள்.
  6. மைசூர் பாக் கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளறி விட்டு கடாயை கீழே இறக்கி கொள்ளவும். பின் ஒரு பெரிய தட்டு எடுத்துக் கொண்டு அதில் நெய்யை தடவி கடாயில் இருக்கும் மைசூர்பாக்கை தட்டில் ஊற்றி நன்றாக குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
  7. பின் மைசூர்பாக் நன்கு குளிர்ந்து கட்டியாக மாறியவுடன் உங்களுக்கு வேண்டுமென்ற வடிவத்தில் மைசூர் பாக்கை வெட்டிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான நெய் மைசூர் பாக் இனிதே தயாராகிவிட்டது.