ருசியான சர்க்கரைவள்ளி கிழங்கு போண்டா இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்!

Summary: மாலை நேரத்தில் சுட சுட டீ, காபியுடன் என்ன சாப்பிடலாம் என்று தோன்றுகிறதா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது சர்க்கரைவள்ளி கிழங்கு போண்டா இப்படி ஒரு முறை செஞ்சி டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் சர்க்கரைவள்ளி கிழங்கில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது, அதனால் உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானதும் கூட.

Ingredients:

  • 3 சர்க்கரைவள்ளி கிழங்கு
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் கறிமசாலா தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் பெருங்காயப்பொடி
  • ½ கப் கடலை மாவு
  • 2 ஸ்பூன் அரிசிமாவு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • கருவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை நன்கு வேக வைத்து மசித்துவைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கறிமசாலா, மிளகாய் தூள், பெருங்காய பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. பிறகு ஒரு பௌலில் மசித்த சர்க்கரைவள்ளி கிழங்கு, அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, சோம்பு, கறிவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு, வதக்கிய மசாலாவை சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுத்து ஒரு வாணலில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  6. இப்பொழுது சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு போண்டா தயார்.