பாகற்காய் பொரியல் இனி இப்படி செய்து பாருங்க! அடுத்தமுறை நீங்களே இப்படி தான் செய்வீங்க!

Summary: மதிய சாதத்துக்கு என்ன பொரியல் செய்வது என்று குழப்பமாக உள்ளதா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது அட்டகாசமான சுவையில் பாகற்காய் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்க அதன் சுவையே தனிதான். அதுமட்டும் அல்லாமல் கசப்பே இல்லாமல் எப்படி பாகற்காய் பொரியல் செய்வதென்று தான் இன்று பார்க்கப்போகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • ½ கிலோ பாகற்காய்
  • 2 வெங்காயம்
  • உப்பு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 2 டீஸ்பூன் உளுந்து
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • கருவேப்பிலை
  • 5 வர மிளகாய்
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் பாகற்காயை நன்கு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். நடுவில் உள்ள விதைகளை நீக்கவும்.
  2. அடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் தெளித்து கொஞ்சம் உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
  3. அடுத்து பாகற்காய் சுருகியதும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சேர்த்து பொரிந்ததும் உளுத்தப்பருப்பு, கடலை பருப்பு, சீரகம், கருவேப்பிலை, மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பிறகு நறுக்கிய வெங்காயம், பெருங்காய பொடி, சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  5. வதங்கியதும் வேக வைத்த பாகற்காய் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  6. பாகற்காய் வெந்ததும் அடுப்பை நிறுத்தவும்.