ருசியான மீன் குழம்பு சாப்பிட மீன் மசாலா பொடி இப்படி ஒரு முறை செய்து பாருங்க! அசத்தலாக இருக்கும்!

Summary: மீன் குழம்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் ஹோட்டல்களில் வைக்கப்படும் மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதன் டேஸ்ட் வீட்டில் செய்தால் வராது. ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். இந்து போன்று மசாலா அரைத்து மீன் குழம்பு வைத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.இந்த மசாலா பொடி எப்படி அரைப்பதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 10 காய்ந்த மிளகாய்
  • 2 டீஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • ½ டீஸ்பூன் வெந்தயம்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை கடாயில் எண்ணெய் ஊற்றாமல் ஒவொன்றாகப் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. மொத்தமாக போட்டு வறுக்காதீர்கள். ஒவொன்றிற்கும் ஒவ்வொரு வெப்பம் பதம் தேவை என்பதால் மொத்தமாக போட்டால் ஏதாவதும் ஒன்று கருகிவிடும்.
  3. வறுத்தும் அதனை நன்கு ஆறவிடவும். ஆறியதும் அதனை அனைத்தையும் மிக்சி ஜாரில் மொத்தமாக போட்டு மைய பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
  4. பின் அதில் சூடு தணிந்ததும் காற்று படாத டப்பாவில் சேமித்து வையுங்கள்.