நாவில் பட்ட உடன் கரையும் வாழைப்பழ அல்வா செய்வது எப்படி ?

Summary: எந்தவித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அந்த நிகழ்ச்சி நடக்காது. ஆம் நாம் பொதுவாக இனிப்பு உணவுகளை நாம் கடைகளில் சென்று தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இனிப்பு சாப்பிடுவதற்கு கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்ப உணவுகள் செய்து சாப்பிடலாமா அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தித்திக்கும் சுவையுடன் வாழைப்பழ அல்வா. இந்த வாழைப்பழ அல்வாவை செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 4 வாழைப்பழம்
  • 150 கிராம் வெல்லம்
  • ½ கப் தண்ணீர்
  • ¼ tbsp ஏலக்காய் துள்
  • 15 முந்திரி பருப்பு
  • 5 tbsp நெய்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் நன்கு பழுத்த நான்கு பெரிய அளவு வாழைப்பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு வாழைப்பழம் தோல்களை நீக்கிவிட்டு பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அதன் பின்பு நாம் நறுக்கிய வாழைப்பழங்கள் அனைத்தையும் ஒரு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு 150 கிராம் வெல்ல கட்டிகளை உடைத்து துாள் தூளாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அந்த பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் நன்கு கொதித்ததும் அதனுடன் துருவிய வெல்லம் உருகி வெல்ல பாகுவாக தயார் செய்து கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி அதனுடன் 15 முந்திரி பருப்புகளை உடைத்து சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும். பின் முந்திரி பருப்புகளை பொன்னிறமாக வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  4. அதன் பின்பு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி நாம் மிக்ஸியில் அரைத்து வாழைப்பழத்தை கடாயில் சேர்த்து ஒரு பத்து நிமிடங்கள் நன்றாக வதக்கி கொண்டே இருக்கவும். வாழைப்பழம் நன்றாக வெந்து நிறம் மாறியதும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் வெல்லப்பாகுவை சேர்த்து கிளறி விடவும்.
  5. பின்பு வெல்லப்பாகுவை அல்வாவில் சேர்ந்து பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா பதத்திற்கு வரும் போது அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி நன்கு கிளறி விடவும் அதன் பின்பு இரண்டு நிமிடங்கள் நன்றாக கிளறி விடவும்.
  6. பின்பு நாம் வறுத்து வைத்த முந்திரி பருப்புகளையும் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும் மறுபடியும் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு நெய் சேர்த்து கிளறி விடவும் அவ்வளவுதான் சுவையான வாழைப்பழம் அல்வா இனிதே தயாராகிவிட்டது.