எவ்வளவு சமைத்தாலும் ஒரே நாளில் காலி ஆகிவிடும்! இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!

Summary: பல்வேறு சட்னி,குருமா வகைகள் இட்லி, தோசைக்கு சப்பாத்திக்கு செய்து சாப்பிட்டாலும் இது போல வாய்க்குருசியாக வெங்காயம் பூண்டு தொக்கு. மற்ற தொக்கு செய்முறை போல வெங்காயத்தை வதக்கல், ஆவியில்வேகா வைத்து பின்னர் வதக்குவது தான் இதன் தனித்துவம். ஒரு முறை செஞ்சு சாப்பிட்டு பாருங்க,எவ்வளவு இட்லி, சப்பாத்தி  வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கிட்டேஇருப்பீங்க! தின்ன தின்ன திகட்டாத இந்த வெங்காயம் பூண்டு தொக்கு சுவையில் அலாதியானதாக இருக்கும். ரொம்பவும் சுலபமாக வீட்டிலேயே எப்படி சுவையான வெங்காயம் பூண்டு தொக்கு செய்யலாம்?என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

Ingredients:

  • 300 கிராம் சின்ன வெங்காயம்
  • 2 பூண்டு
  • 3 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 புளி
  • 4 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது கடலெண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
  • உப்பு
  • 2 டீஸ்பூன் தனியா
  • 6 வரமிளகாய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்

Equipemnts:

  • 1 கடாய்
  • மிக்ஸி

Steps:

  1. முதலில், சின்ன வெங்காயம் ,பூண்டு  தோல் உரித்து ஒரு இட்லி பானை அல்லது ஒரு மூடி போட்ட கடாயில், ஆவியில் வேக வைக்க வேண்டும்.
  2. நான்கு நிமிடத்திலேயே இது நன்கு வெந்து விடும்.பின்னர் ஆறியவுடன் , மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்,
  3. பின்னர்,ஒரு கடாயை அடுப்பில் சிறு தீயில் வைத்து, ரெண்டு ஸ்பூன் தனியா, ஆறு வரமிளகாய், ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் வெந்தயம், சேர்க்கவும், ஒரு மூணு நாலு நிமிஷத்திலேயே கடுகு நல்லா பொரிஞ்சு வறுபட்டுவிடும்,அனைத்தையும்  சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும் , பின்னர், ஆறியதும் மிக்ஸி ஜார்ல சேர்த்து , மிளகாய் தூள் மூணு டீஸ்பூன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  4. பின்னர் அடுப்பில், ஒரு கடாயை வைத்து சூடானதும் நாலு டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் கொஞ்சம் கருவேப்பிலை சேர்க்கவும்.
  5. கருவேப்பிலை பொரிஞ்சதும் அரைச்சு வச்ச வெங்காயம் பூண்டு கலவையை சேர்க்கவும், ரெண்டு நிமிஷம் நல்லா வதக்கவும்,கால் டீஸ்பூன் பெருங்காயம், 1/2 டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். வதங்கியதும், அரைத்த மசாலா பவுடர் சேர்த்து கலந்துவிடவும்.
  6. பின்னர் அதில், புளி தண்ணீர் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு  கிளறி விடவும், எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி, இட்லி ,தோசை,சப்பாத்தியுடன் பரிமாறவும்.