கறிக்குழம்பையும் மிஞ்சும் சுவையில் காரைக்குடி முட்டை குழம்பு இப்படி செய்து பாருங்க!

Summary: காரைக்குடியில் சமைக்கப்படும் முட்டை குழம்பு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். முட்டை குழம்பு உணவு பிரியர்களின் விருப்பமான செய்முறையாக இருக்கும். காரைக்குடியின் தனித்துவமான சமையல் பாணியும், விதவிதமான முறையில் தயாரிக்கப்படும் உணவு வகைகளும் அனைவரையும் ஈர்க்கின்றன. முட்டையை வைத்து எந்த உணவு செய்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தட்டாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். சாம்பார், காரக்குழம்பு, மோர்க்குழம்பு இப்படி செய்வதை விட ஒரு முறை முட்டை உடைத்து ஊற்றி குழம்பு செய்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இதை எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

Ingredients:

  • 5 முட்டை
  • 200 கிராம் சின்ன வெங்காயம்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் சிக்கன் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில்முட்டையை நீரில் போட்டு நன்கு வேக வைத்து இறக்கி, முட்டை ஓட்டை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர்ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி விட வேண்டும்
  3. பிறகுஅதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, மிளகாய் தூள், மல்லித் தூள், சிக்கன் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
  4. பின்அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு, இறுதியில் முட்டையை  சேர்த்துசிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால், காரைக்குடி முட்டைக் குழம்பு ரெடி!!!