இட்லி, தோசைக்கு ஏற்ற பிரண்டை சட்னி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! அஹா என்ன சுவை!

Summary: அருமையான ஆரோக்கியமான பிரண்டை சட்னி இப்படி செஞ்சு பாருங்க இட்லி, தோசைக்கு டேஸ்ட்டியாக இருக்கும்.பிரண்டை மூலிகையாக பயன் படுத்தப்படுகிறது. இது சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல ஒரு மூலிகையாக இருக்கக் கூடியது இந்த பிரண்டை சட்னி. சாப்பிட டேஸ்ட்டியாக இருக்கக் கூடிய இந்த பிரண்டை சட்னி ரெசிபி இதே அளவுகளில், ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பிரண்டை சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • ¼ kg பிரண்டை
  • 5 காய்ந்த மிளகாய்
  • ¼ cup தேங்காய்
  • 3 பூண்டு
  • 1 வெங்காயம்
  • 1 tsp பெருங்காயம்
  • புளி
  • 2 tsp உளுந்தம் பருப்பு
  • 1 tsp கடுகு
  • 115 கறிவேப்பிலை
  • tbsp எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி

Steps:

  1. பிரண்டை சட்னி செய்ய முதலில் பிரண்டையை கழுவி சிறுசிறு பிரண்டை சட்னிதுண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
  2. வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த உடன் பிரண்டையை அதில் போட்டு நன்கு வதக்கவேண்டும். பிரண்டையை நன்கு வதக்கவில்லை என்றால் நாக்கு அரிப்பு எடுத்துவிடும்.
  3. பிரண்டை நன்கு வதக்கிய உடன் அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு, தேங்காய் துருவல், அனைத்தையும் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.
  4. மிக்சியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய்யில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து அரைத்ததை சேர்த்தால் பிரண்டை சட்னி ரெடி.
  5. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த பிரண்டை சட்னியை சப்பாத்தி, சாதம், இட்லி, சாம்பார் சாதம், ரச சாதம், தயிர் சதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.