நீண்ட நாட்கள் கெடாத தக்காளி தொக்கு செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் தக்காளி தொக்கு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.இதில் குறிப்பிட்டுள்ள பொருட்களின் அளவில் இதுபோன்று நீங்கள் வெங்காயத்துக்கு செய்தால் கண்டிப்பாக நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும். இன்று தக்காளி தொக்கு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் நாம் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 6 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 6 tbsp நல்லலெண்ய்
  • 1 tbsp கடுகு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 10 பல் பூண்டு
  • ¼ tbsp பெருங்காயத்தூள்
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 2 tbsp மிளகாய்த் தூள்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 20 கிராம் புளி உற வைத்த தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயில் ஆறு டீஸ்பூன் அளவு நல்லெண்ணையை ஊற்றிக் கொள்ளுங்கள் என்னை நன்றாக காய்ந்ததும் அதனால் ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  2. அதன் பின்பு இதனுடன் நான் தோல் உரித்து வைத்திருக்கும் 10 பூண்டு பற்களையும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  3. வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொண்டு வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் பின்பு கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவு மிளகாய் தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  4. அதன் பின்பு மசாலா பொருட்கள் நன்றாக வதங்கியதும். நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் இருபது கிராம் புளியை ஊறவைத்து சிறு தண்ணீரை சேர்த்துக் கொண்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  5. தக்காளி தொக்கு நன்கு வதங்கி பிரவுன் கலர் வரும் வரை எட்டு நிமிடத்திற்கு மேல் நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் நீண்ட நாள் கெடாத தக்காளி தொக்கு தயாராகி விட்டது.