நாவில் எச்சி ஊறும் ருசியில் பாரை மீன் கறி இப்படி ஒரு முறை மட்டும் செய்து பாருங்க!

Summary: அசைவம் சாப்பிடுபவர்கள் மீன்களை விரும்பி சாப்பிடுவார்கள். மீன் சாப்பிடவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.மீன் உயர்தர புரதத்தின் அற்புதமான மூலமாகும்.எப்போதும் மீன் குழம்பு மீன் வறுவல் என்று செய்து சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு தான் இந்த ரெசிபி .இதற்கு முன்பு நீங்கள் பாரை மீன் கறி சாப்பிட்டிருக்கிறீர்களா? இல்லை என்றால் கவலை வேண்டாம் இன்று பாரை மீன் கறி செய்முறையை பற்றி பகிர்ந்துகொண்டுஉள்ளோம் . இதை செய்து சுவைத்து மகிழுங்கள்.வாங்க இதை எப்படி செய்வது என்றுபார்ப்போம்.

Ingredients:

  • 1/2 கிலோ பாரை மீன்
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள்ஸ்பூன் மல்லித் தூள்
  • 1/2 ஸ்பூன் வெந்தயப்பொடி
  • 2 வற்றல்
  • 1 டேபிள்ஸ்பூன் லைம் ஜுஸ்
  • கொடம்புளி
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 3 பச்சை மிளகாய்
  • 2 டீஸ்பூன் கார்ன் ஃப்லோர்
  • 3 இணுக்கு கறிவேப்பிலை
  • 4 டேபிள்ஸ்பூன் தேங்காய்
  • 2 டேபிள்ஸ்பூன் முந்திரி பேஸ்ட்
  • 1 டீஸ்பூன் சீரகப்பொடி
  • 1/2 டேபிள்ஸ்பூன் இஞ்சி, பூண்டு
  • 1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
  • பீஸ்
  • 50 மில்லி தேங்காய் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மீனை சுத்தம் செய்து ஒரு போல் துண்டு போட்டு,கழுவி நீர் வடிகட்டி உப்பு,மஞ்சள் பொடி,சில்லி பவுடர்,கார்ன் ஃப்லோர் சேர்த்து பேஸ்ட் ஆக்கி அரை மணி நேரம் ஊறவைத்து பொரித்து எடுக்கவும்.
  2. தக்காளி,வெங்காயம், மிளகாய் கட் செய்து வைக்கவும். பொரித்த பாத்திரத்திலேயே கடுகு வெடிக்க விட்டு,கருவேப்பிலை,வற்றல்,இஞ்சி பூண்டு வதக்கவும்,
  3. பின்பு வெங்காயம்,தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கி,உப்பு சேர்த்து,மல்லி,சீரகத்தூளை சேர்க்கவும்,சிறிது தண்ணீர் சேர்த்து புளி சேர்த்து கொதிக்க விடவும்,
  4. வெந்தயதூள் சேர்க்கவும். தேங்காய் முந்திரி பேஸ்ட் சேர்த்து கொதிவந்ததும் பொரித்த மீனை சேர்க்கவும்.பின்பு பரிமாறவும்