வார கடைசி நாட்களில் காரசாரமான ருசியில் இறால் தொக்கு இப்படி செய்து பாருங்க!

Summary: ஹோட்டல் சுவையில் சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட இறால் தொக்கு இனி இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த இறால் தொக்கு செய்து சாதம், சப்பாத்தி, தோசை, போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம்.எப்படி இந்த இறால் தொக்கு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ¼ கிலோ இறால்
  • 15 சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • எண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் இறாலை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சுத்தம் செய்த இறாலைப் போட்டு, மஞ்சள் தூள், சிறிது மிளகாய் தூள், சிறிது சோம்பு தூள் போட்டு நன்கு கிளறிவிட்டு 2 நிமிடங்கள் வேகவிடவும். வெந்ததும் இறக்கி தனியாக வைத்திருக்கவும்.
  3. அடுத்து மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, நசுக்கிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. வதங்கியதும் மீதமுள்ள மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும், அதனுடன் இறால் கலவையைச் சேர்த்து பிரட்டி சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.
  5. இப்பொழுது சுவையான இறால் தொக்கு தயார்.