காரசாரமான ருசியில் நண்டு ரசம் இப்படி செய்து பாருங்க! சூப் போல குடிக்கவும் செய்யலாம்!!

Summary: காரசாரமான நண்டு ரசம் இப்படி ஒரு தரம் செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. மழை காலங்களில் சளி பிடித்தால் இந்த நண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள் விரைவில் செரியாகிவிடும்.எப்படி இந்த நண்டு ரசம் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ¼ கிலோ நண்டு
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • ½ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • எண்ணெய்
  • 1 தக்காளி
  • 15 சின்ன வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் சோம்பு
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து, 2 முறை மஞ்சள்தூளில் பிரட்டி கழுவி கொள்ளவும்.
  2. அடுத்து சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி, ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.
  3. பிறகு குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் நண்டு, மிளகாய் தூள், பூண்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின்னர் 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கி பரிமாறவும்.
  6. இப்பொழுது நண்டு ரசம் தயார்.