அசத்தலான சுவையில், ருசியான சுரைக்காய் கூட்டு மதிய உணவுக்கு இப்படி செய்து பாருங்க!

Summary: ஹோட்டல் சுவையில் சுரைக்காய் கூட்டு இனி இப்படி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு லன்ச்க்கு இது போன்று கூட்டு செய்து சாதத்துடன் கிளறி கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். உடலுக்கும் ஆரோக்கியமான உணவு.எப்படி இந்த கூட்டு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ¼ கிலோ சுரைக்காய்
  • ½ கப் பாசிப்பருப்பு
  • உப்பு
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 2 மிளகாய் வற்றல்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் சுரைக்காய் மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  2. அடுத்து மிக்சியில் துருவிய தேங்காய் மற்றும் மிளகாய் வற்றல், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. அரைத்த பேஸ்ட்டை பின்பு வெந்து சேர்த்து கொண்டிருக்கும் பருப்பில் சேர்த்து கிளறி, 5 நிமிடம் அடுப்பில் பருப்புடன் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
  4. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இறக்கி வைத்துள்ள பருப்புடன் சேர்க்கவும். இப்போது சுவையான சுரைக்காய் கூட்டு தயார்.