சுடு சோறுடன் சாப்பிட ருசியான வெங்காயத்தாள் முட்டை பொரியல் இப்படி செய்து பாருங்க!

Summary: சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட வெங்காயத்தாள் முட்டை பொரியல் இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அதன் சுவையே தனிதான். இந்த பொரியல் செய்து சாதத்துடன் போட்டு பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அல்லது லன்ச்க்கு கொடுத்து விடலாம். விரும்பி சாப்பிடுவாங்க. மற்றும் இந்த பொரியல் சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கட்டு வெங்காயத்தாள்
  • 10 சின்ன வெங்காயம்
  • 4 வர மிளகாய்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் கடலை பருப்பு
  • ½ டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 முட்டை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் ஒரு கடையை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
  2. வதங்கியதும் அதில் சின்ன வெங்காயம் சேர்த்து லேசாக வாதக்கவிட்டு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நறுக்கிய வெங்காயத்தாளை சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயத்தாள் சில நிமிடங்களிலே வதாகிவிடும். வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிடவும்.
  4. முட்டை வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.