நாகர் கோவில் சுவையான பருப்பு போலி செய்வது எப்படி ?

Summary: நாகர்கோவில் ஸ்பெஷல் போலி எப்படி செய்வார்களோ அதே போல் தான் நாமும் போலி செய்து பார்க்க போகிறோம். இப்படி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் போலி செய்து கொடுத்தீர்கள் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை மாலை நேரங்களில் உங்கள் குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் அவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆகையால் இன்று இந்த நாகர்கோவில் பருப்பு போலி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

Ingredients:

  • 1 கப் மைதா மாவு
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 சிட்டிகை கலர் பொடி
  • ½ கப் தண்ணீர்
  • 6 tbsp எண்ணெய்
  • ¾ கப் கடலை பருப்பு
  • 1 கப் சக்கரை
  • 4 ஏலக்காய்
  • 4 tbsp அரிசி மாவு
  • 2 tbsp நெய்
  • 1 கப் தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 தோசை கல்
  • 2 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் ஒரு பெரிய பவுளில் ஒரு கப் மைதா மாவை எடுத்துக்கொள்ளவும் இந்த மைதாவுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு சிட்டிகை கலர் பொடி சேர்த்து கொண்டு நன்றாக கலந்து கொள்ளவும். பின் அரை கப் தண்ணீரை சேர்த்து சிறிது சிறிதாக சேர்த்து மாவு கையில் ஒட்டாத பதத்திற்கு வரும் வரை பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்பு மாவு நன்றாக பிசைந்து முடித்தவுடன் அதே போல் அந்த மாவு முழ்குமாறு ஆறு டீஸ்பூன் அளவிற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மாவை இரண்டு மணி நேரம் எண்ணெயில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு போலிக்கு பூரணம் தயாரிக்க முக்கால் கப் கடலை கடலை மாவை இரண்டு முறை தண்ணீரில் அலசிக்கொண்டு பின்பு ஒரு பெரிய பவுலில் இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு தண்ணீரில் ஊற வைத்த கடலை பருப்பை ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு வேக வைத்த கடலைப்பருப்பை ஒரு மிக்ஸியில் போட்டு மாவு போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  4. அதன் பிறகு இன்னொரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து அதனுடன் 5 ஏலக்காய் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். அதன்பின் நாம் அரைத்த கடலை மாவை ஒரு கடாயில் சேர்த்து கிளறி விடவும் அதன்பின் மிக்ஸியில் அரைத்த சர்க்கரையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின்பு சர்க்கரை உருகி கடலை மாவு சர்க்கரையும் சேர்ந்து வற்றி வரும் வரை கிளறி விடவும்.
  5. அதன் பின்பு கடாயை கீழே இறக்கி பூரணத்தை உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு முதலில் எண்ணெயில் ஊற வைத்த மைதா மாவை சிறிது எடுத்து விரித்து வைத்து பூரணத்தை அதற்குள் வைத்து மைதா மாவை மூடி விடவும். பின் உருன்டையை தட்டையாக அமுக்கி கொள்ளவும்.
  6. பின் ஒரு தட்டில் சிறுது அரிசி மாவு எடுத்துக் கொண்டு அதில் போலியின் இரு பக்கமும் தொட்டு பூரி உருட்டுவது போல் பூரி கட்டையில் வைத்து மென்மையாக செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு தோசை கல்லில் அடுப்பில் வைத்து கொள்ளவும்.
  7. பின் கல் சூடேறியதும் போலியை கல்லில் சேர்த்து ஐந்து சொட்டு நெய் ஊற்றி கொள்ளுங்கள், இரண்டு பக்கமும் பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடுங்கள். இதுபோல் மீதம் இருக்கும் மாவையும் போலியாக தயார் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் இனிமையான நாகர்கோவில் பருப்பு போலி தயாராகி விட்டது.