இரவு உணவுக்கு ருசியான கடலை மாவு பூரி இப்படி செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Summary: காலை உணவுக்கு இது போன்று கடலை மாவு பூரி செய்து சாப்பிட்டு பாருங்க அருமையான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.எப்பொழுது ஒரே மாதிரியான கோதுமை மாவில் பூரி செய்து சாப்பிடாமல் இது போன்று வித்தியாசமாக கடலை மாவில் பூரி செய்து சாப்பிடுங்கள் சுவையாக இருக்கும்.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ¼ கப் கடலை மாவு
  • 1 கப் மைதா மாவு
  • ½ டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, மைதா மாவு, சோம்பு, மிளகாய் தூள், உப்பு, மற்றும் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி, தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பூரி பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
  2. பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக பூரி போன்று தேய்த்து கொள்ளவும்.
  3. கடைசியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.