ருசியான டீக்கடை கீரை உளுந்து போண்டா இப்படி செய்து பாருங்க! அதன் ரகசியம் இது தான்!

Summary: போண்டா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலும் இதை கடைகளில் இருந்து நாம் வாங்கி சாப்பிடுவோம். நம்முடைய வீட்டில் இப்படி ஒரு கீரை உளுந்துபோண்டாவை சுலபமான முறையில் செய்யலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் கீரை உளுந்து போண்டாசெய்வது எப்படி. இந்த முறையில் கீரை உளுந்துபோண்டா செய்தால் பக்குவமும் தவறாது. சுவையாக மொறுமொறுப்பாக கிடைக்கும். வாங்க அந்த அருமையான ஸ்னாக்ஸ் ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1/2 கப் உளுந்து
  • 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு
  • 1 கப் கீரை
  • 1/4 கப் வெங்காயம்
  • 1/4 கப் கேரட்
  • 1/4 கப் தேங்காய்
  • 3 பச்ச மிளகாய்
  • 1 தேக்கரண்டி உப்பு
  • 1/4 தேக்கரண்டி மிளகு சீரகப்பொடி
  • எண்ணெய்
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 2 ஆர்க்கு கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. உளுந்தை களைந்து ஒருமணிநேரம் நன்றாக ஊறவைத்து கிரைண்டரில் நாற்பது முதல் அறுபது நிமிடங்கள் வரை தண்ணீர் சிறிது தெளித்து பந்து மாதிரி அரைத்துக்கொள்ளவும்
  2. அதனுடன்கொடுக்கப்பட்ட பொருட்கள் (எண்ணெய் தவிர) அனைத்தும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் வைத்து நன்றாக காய்ந்ததும் சிறிய போண்டாக்களாக பொரித்து எடுக்கவும்