வெயிலுக்கு இதமா தேங்காய குல்பி இப்படி வீட்டிலே செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Summary: சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஐஸ்கிரீமை மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் சாப்பிடுவார்கள். கோடை நாட்களில் குல்ஃபி சாப்பிடுவது உற்சாகமான உணர்வைத் தருகிறது. கடைகளில் இருந்து வாங்கும் இந்த குல்ஃபியை வீட்டிலேயே தேங்காய் வைத்து வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இது மிகுந்த சுவையுடன் ஆரோக்கியமும் நிறைத்தது. வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்வது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் மலிவானது அடுப்பு பக்கமே போகாம எல்லாருக்கும் ரொம்ப வே பிடிச்ச சும்மேற் கு ஸ்பெஷலான ஐஸ்கிரீம் எப்படி பண்றதுன்னு பாக்கலாமா.

Ingredients:

  • 1 தேங்காய்
  • 2 ஏலக்காய்
  • 4 Tsp பால் பவுடர்
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/4 கப் மில்க் மெய்டு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 6 டம்பளர்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. குல்பி செய்ய முதலில் ஒரு தேங்காயை உடைத்து அந்த தேங்காய் தண்ணிய ஓரமா வச்சிட்டு. தேங்காய் மேலிருக்குற கருப்புகளை சீவி விடவும். இதை எடுத்தா தான் பாக்கறதுக்கு ஐஸ்கிரீம் நன்றாக இருக்கும்.
  2. அதன் பின் தோல் சீவிய தேங்காயை அப்டியே மிக்ஸில் ஜாரில் சேர்த்து அதனுடன் நாம் முதில் உடைத்த தேங்காய் தண்ணீரை சேர்த்து நன்கு கோர கோரப்ப அரைச்சு எடுத்து கொள்ளுங்கள்.
  3. தேங்காய் சிறுது அரைபட்டதும் அதனுடன் சிறிது ஏலக்காய், சர்க்கரை, பால் பவுடர் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்னர் இதனுடன் மில்க்மாய்டு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
  4. பின்னர் ஒரு ஐஸ்கிரீம் மௌல்டில் ஊற்றி பிரீஸிரில் வைக்கவும். உங்களிடம் ஐஸ்கிரீம் மௌல்டில் இல்லை என்றால் டம்ளரில் ஊற்றி ஸ்பூன் போட்டு வைக்கலாம் அடுத்த நாள் வெளியில் எடுத்து சிறுது நேரம் களித்து எடுங்கள். சுவையான தேங்காய் குல்ஃபி ரெடி. இது ரொம்ப சுவையாக இருக்கும்.