மணக்க மணக்க பருப்பு ரசம் இப்படி செய்து பாரும் வாசம் பக்கத்து வீடு வரைக்கும் வீசும்!

Summary: சமையல் எதுவாக இருந்தாலும் ரசம், தயிர் இவை இரண்டும் கட்டாயமாக இருக்கும். ரசமாக எதுவாக இருந்தாலும்அதை சாப்பிட்ட உடன் ஜீரண சக்தி அதிகரித்து உடலுக்கு தெம்பை கொடுக்கும். ஒவ்வொரு வீட்டிலும்ஒவ்வொரு மாதிரி ரசம் வைப்பார்கள். இன்றைக்கு பருப்பு ரசம் ரெசிபியை தான் பார்க்கப்போகின்றோம். வழக்கம் போல ரசத்தில்  எல்லா பொருட்களும் சேர்த்து இந்த ரசத்தை வைத்தாலும்,இந்த ரெசிபி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஒரு முறை இந்த ரசத்தையும் வைத்து பாருங்கள்.மழைக்காலத்துக்கு சுடச்சுட சாதத்தில் ஊற்றி சாப்பிட கூடுதல் சுவை ரசம் கிடைக்கும்.

Ingredients:

  • 1 தக்காளி
  • புளி
  • 8 பல் பூண்டு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 5 காய்ந்த மிளகாய்
  • பெருங்காயத்தூள்
  • உப்பு
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • 100 மில்லி பருப்புத் தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. புளியை சிறிது நேரம் ஊற வைத்து, கரைத்துவடிகட்டி வைத்துக் கொள்ளவும். பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாயை கரகரப்பாக பொடித்து  கொள்ளவும்.
  2. கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை கையில் நன்றாக பிசைந்தோ அல்லது மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றியோ  தனியேவைத்துக் கொள்ளவும்.
  3. கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகுபோட்டு தாளித்த பின் தட்டி வைத்துள்ள பூண்டு சீரகம் காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளியுடன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை சிறிதளவு இதனுடன் சேர்த்துத்  தாளிக்கவும்.
  4. அடுத்து அதில் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து மிதமான சூட்டில் லேசாக கொதிக்க விடவும். பிறகு இதில் பருப்புத் தண்ணீரைச் சேர்க்கவும்.
  5. கொதிவரும் போது அடுப்பை அணைத்து, இறுதியில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை ரசத்தின் மேலே தூவவும். சுவையான பருப்பு ரசம் தயார்.