ஸ்டார் ஹோட்டல் சுவையில் பன்னீர் சில்லி செய்வது எப்படி ?

Summary: சாமிக்காக மாலை போட்டு இருப்பவர்கள் மாதம் கணக்கில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டி இருக்கும்.அவர்களும் முடிந்த அளவுக்கு சாம்பார் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும் நீங்கள் சாம்பாருக்கு பதிலாக பன்னீர் சில்லி வைத்து சாப்பிட்டு பாருங்கள் ரூசீகரமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அடுத்த முறையும் இதையே செய்யுங்கள் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இப்பொழுது இந்த சுவையான பன்னீர் சில்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.

Ingredients:

  • 150 கிராம் பன்னீர்
  • ¼ கப் சோள மாவு
  • ¼ கப் மைதா மாவு
  • ⅛ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp மிளகாய் தூள்
  • உப்பு
  • தண்ணீர்
  • பன்னீர்
  • 3 tbsp எண்ணெய்
  • ¼ tbsp கடுகு
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பூல் பூண்டு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 தக்காளி
  • உப்பு
  • ½ tbsp கரம் மசாலா
  • 1 tbsp மிளகாய் தூள்
  • கொத்தமல்லி
  • ½ tbsp எலுமிச்சை சாறு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பெரிய பவுளில் எடுத்துக் கொண்டு அதில் கால் கப் சோள மாவு, கால் கப் மைதா மாவு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் தேவையான உப்பு சேரத்து மாவை நன்றாக கலந்து கொள்ளவும். அதன் பின் மாவுடன் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு மாவை தயார் செய்து கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு நாம் எடுத்து வைத்திருக்கும் 150 கிராம் அளவு பன்னீரை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். பின்பு நாம் சிறிதாக வெட்டிய பன்னீர் துண்டுகளையும் நாம் தயார் செய்து வைத்த மசாலா கலாவையில் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.. பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் நாம் மசாலாவில் சேர்த்து வைத்த பன்னீரை எண்ணெயில் சேர்த்து நன்றாக சிவக்கும் வரை பொறித்துக் கொள்ளவும். பின்பு பன்னீர் நன்றாக வெந்ததும் பன்னீரை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  4. அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  5. வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் இதனுடன் அரை டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். அதன் பின்பு நறுக்கிய தக்காளி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கி கொள்ளவும்.
  6. பின்பு தக்காளி நன்றாக மசிந்து வந்ததும், நாம் தயார் செய்த பன்னீரையும் இதனுடன் சேர்த்து நன்கு கிளறி விட்வும், பின் மூன்று நிமிடம் நன்கு வதக்கிய பின் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் சிறிது லெமன் ஜூஸ் சேர்த்துக் கொள்ளவும் அவ்வளவுதான் சுவையான பன்னீர் சில்லி இனிதே தயாராகிவிட்டது.