மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான சர்க்கரைவள்ளி கிழங்கு வடை இப்படி செய்து பாருங்க!

Summary: சர்க்கரைவள்ளி கிழங்கு வடை செய்முறையைப் செய்து ஒருமுறை சாப்பிட்டால் அனனவரும் ஆச்சரியப்படுவீர்கள்,ஏனெனில் இது சாதாரண உருளைக்கிழங்கை விட வித்தியாசமானது மற்றும் ருசியானது.. நாம் அனைவரும்சர்க்கரைவள்ளி கிழங்கு வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிடுகிறோம். ஆனால், நீங்கள் எப்போதாவதுவீட்டில் சர்க்கரைவள்ளி கிழங்கு வடை செய்முறையை முயற்சித்தீர்களா? இந்த உணவின் சிறப்புஎன்னவென்றால், இதன் சுவை காரமாகவும் இனிப்பாகவும் இருக்கும். மேலும் மிருதுவானது. உங்கள்குடும்ப உறுப்பினர்களுக்கு காலை உணவாக பரிமாறலாம்.சமைக்க தேவையானவை. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • அரிசிமாவு
  • மிளகாய்தூள்
  • 2 சர்க்கரைவள்ளி கிழங்கு
  • 1/2 கப் நிலக்கடலை மாவு
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 பெருங்காயத்தூள்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சர்க்கரைவள்ளியை மண் போகக் கழுவி, சுத்தம்செய்து தோல் சீவி, துருவிக் கொள்ளவும்.
  2. ஒரு கப் துருவலுக்கு கால் கப் நிலக்கடலை பொடி சேர்த்து, சிறிதளவு அரிசிமாவு, உப்பு, மிளகாய்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தேவையானால் தண்ணீர் தெளித்து பிசையவும்.
  3. பின் பிசைந்த மாவில் சிறிதளவு எடுத்து வடைபோல் தட்டி, எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். மரவள்ளிக்கிழங்கிலும் இதே முறையில் செய்யலாம்