சாம்பார் சாதம், ரசம் சாதமுடன் சாப்பிட ருசியான பீன்ஸ் பொரியல் இப்படி செய்து பாருங்க!

Summary: மதிய சாதத்துடன் சேர்த்து சாப்பிட பீன்ஸ் பொரியல் அட்டகாசான சுவையில் இனி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.குழந்தைகளுக்கு லன்ச்க்கு இந்த பொரியல் செய்து சாதத்துடன் கிளறி கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். அதுமட்டும் அல்லாமல் இதில் சத்துக்களும் உள்ளது அதனால் ஆரோக்கியமான உணவும் கூட.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 250 கிராம் பீன்ஸ்
  • ¼ கப் பச்சை பருப்பு
  • 1 வெங்காயம்
  • 4 காய்ந்த மிளகாய்
  • கறிவேப்பிலை
  • கடுகு, சீரகம், எண்ணெய்
  • துருவிய தேங்காய்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வும். மிளகாய் வற்றலை இரண்டிரண்டாக கிள்ளி வைக்கவும
  2. அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  3. அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும் .
  4. வெங்காயம் வதங்கியவுடன் பச்சை பருப்பை சேர்த்து லேசாக வதக்கவும்.
  5. அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  6. பருப்பு அரை வேக்காடு வெந்ததும் நறுக்கின பீ ன்ஸையும் உப்பையும் சேர்த்து கிளறி மூடி வைக்கவம்
  7. நன்கு வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  8. சுவையான, சத்தான பீன்ஸ் பொரியல் தயார். வெறும் சாதத்தில் கூட நெய் விட்டு சாப்பிடலாம்.
  9. தண்ணீர் அதிக அளவு ஊற்றி வேக வைத்தால் சுவை மாறும்.