ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு இப்படி வீட்டிலே செய்து பாருங்க!

Summary: ஹோட்டல்களில் சாதத்துக்கு வைக்கப்படும் கூட்டு அது ஒரு தனி சுவைத்தான். அதே மாரி வீட்டில் நாம் செய்தால் அந்த டேஸ்ட் வருவதில்லை. இனி அந்த கவலை வேண்டாம். ஹோட்டல் சுவையில் இனி நாம்பளும் வீட்டிலே புடலங்காய் கூட்டு சுலபமாக செய்து விடலாம்.இந்த கூட்டு செய்து சுட சுட சாதம், புளிகுழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.இந்த கூட்டு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். அட்டகாசமாக இருக்கும்.

Ingredients:

  • ¼ கப் பாசிப்பருப்பு
  • மஞ்சள் தூள்
  • பெருக்காய்பொடி
  • ¼ கிலோ புடலங்காய்
  • உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 10 மிளகு
  • 2 வரமிளகாய்
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • ½கப் தேங்காய் துருவல்
  • எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 வெங்காயம்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி தழை

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து மஞ்சள் தூள்,பெருங்காயப்பொடி சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
  2. நன்கு பருப்பு வெந்ததும் தோல் நீக்கி நறுக்கிய புடலாகாவை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
  3. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் உளுத்தம் பருப்பு, மிளகு, வரமிளகாய், சேர்த்து வருது மிக்சியில் சேர்த்து சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  4. பிறகு வேக வைத்த புடலங்காவில் அரைத்ததை சேர்த்து கிளறிவிடவும்.
  5. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, ஒரு வரமிளகாய் கிள்ளி போட்டு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், சேர்த்து பொன்னிறமாக வதக்கி புடலங்காவில் கொட்டி கிளறவும்.
  6. கடைசில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இப்பொழுது புடலங்காய் கூட்டு தயார்.