ருசியான வேர்க்கடலை போண்டா இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்!

Summary: போண்டா சாப்பிட ஆசையா இருக்கு.. ஆனா கடலைமாவு ஒத்துக்காது. அஜீரணத்தொல்லையால் அவதிப்பட வேண்டியிருக்குமேனு அலுத்துக்கொள்கிறவரா நீங்கள்.. இதோ இந்த சத்தான வேர்க்கடலை போண்டா செய்து சாப்பிடுங்கள் ருசி பிரமாதமாயிருக்கும். கடலைமாவு சேர்க்காமல் வேர்க்கடலை  மட்டும் பயன்படுத்தி இந்த போண்டாவை டீ போடும் நேரத்தில் சட்டென செய்து விடலாம்.பிரட் சேர்த்திருப்பதால் மிருதுவாகவும் இருக்கும். கடலை மாவு சேர்க்காதலால் குழந்தைகள், பெரியவர்கள் என எல்லாருக்குமே கொடுக்கலாம்.

Ingredients:

  • 1 கப் வறுத்த வேர்க்கடலை
  • 1/2 கப் முந்திரி பருப்பு
  • 2 கப் பிரட் துண்டுகள்
  • 1 கப் பால்
  • 1 வெங்காயம்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • 4 பச்சை மிளகாய்
  • 1 இஞ்சி
  • உப்பு
  • 400 கிராம் எண்ணை

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. வேர்க்கடலை,முந்திரி பருப்பு, வெங்காயம், மிளகாய், இஞ்சி, எல்லாவற்றையும் மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். பிரட் துண்டுகளை உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து, பால் விட்டு கெட்டியாகப் பிசையவும்.
  2. தேவையானஉப்பைக் கடைசியாகச் சேர்த்து நன்கு கலக்கவும். கடாயில் எண்ணை ஊற்றி நன்கு காய்ந்ததும், செய்துவைத்திருக்கும் கலவையை போண்டாக்களாக கிள்ளி எண்ணையில் போடவும்.
  3. நன்குசிவந்து மொறு, மொறுப்பானதும் வடிகட்டியில் போடவும். ஒருதட்டில் வைத்து சூடாகப் பரிமாறவும். சுவையான வேர்க்கடலை போண்டா தயார்