ருசியான தட்டு கடை சாம்பார் சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: சாம்பார் சாதம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் ஹோட்டல்களில் தரப்படும் சாம்பார் சாதம் மிகவும் சுவையாக இருக்கும். அதில் நெய் முந்திரி எல்லாம் போட்டு சுட சுட சாப்பிடும் போது அதன் சுவையே தனிதான்.ஆனால் நம் வீட்டில் ஹோட்டல் சுவையில் எப்படி செய்வதென்று சிலருக்கும் தெரியாது. ஆனால் இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல் சுவையை விட அட்டகாசமான சுவையில் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1½ கப் அரிசி
  • ¾ கப் துவரம் பருப்பு
  • 3 முருங்கைக்காய்
  • 3 கத்திரிக்காய்
  • சின்ன வெங்காயம்
  • புளி
  • 2 தக்காளி
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • ¼ கப் கடலை பருப்பு
  • ¼ கப் தனியா {மல்லி }
  • 7 மிளகாய் வற்றல்
  • பெருங்காயம்
  • ¼ கப் தேங்காய் துருவல்
  • கடுகு
  • கடலை பருப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி, முந்திரி

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் வெங்காயத்தை தோள் உரித்து வைத்துக்கொள்ளவும். முருங்கைக்காய், கத்திரிக்காய், தக்காளி மூன்றையும் நறுக்கிக்கொள்ளவும்.
  2. அரிசி, மற்றும் பருப்பை ஒன்றாக குக்கரில் சேர்த்து நன்கு குழைய வேகவைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், தனியா, மற்றும் பெருங்காயம் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
  4. வறுத்த பொருட்கள் ஆறியதும் அதனை மிக்சியில் சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.
  5. பிறகு வாணலில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலை பருப்பு, கருவேப்பிலை, போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய், தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு புளியை கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
  6. காய்கறிகள் வெந்ததும், பொடித்து வைத்துள்ள பொடியை தூவி சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். பிறகு வேக வைத்த அரிசி, மற்றும் பருப்பை இதில் போட்டு நன்கு கிளறவும். நன்கு கலந்த பிறகு சிறிது நேரம் கழித்து அடுப்பை நிறுத்தவும்.
  7. கடைசியாக நெய் மற்றும் வறுத்த முந்திரிப்பருப்பை சேர்த்து பரிமாறவும்.