சுவையும் மணமும் நிறைந்த அரபிக் டீ செய்வது எப்படி ?

Summary: டீ குடிப்பதன் மூலம் உடலும் மணமும் புத்துணர்ச்சியாக இருப்பதால் நாம் செய்யும் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது சொல்ல போனால் பல ஆண்கள் வீட்டில் டீ போட்டாலும் வெளியே சென்று கடைகளில் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஆனால் இன்று நாம் அரபிக் நாடுகளில் அவர்கள்போடும் டீ சுவையாகவும், மணமாகவும் இருக்கும். இந்த அரபிக் டீயை நீங்கள் உங்கள் வீட்டில் போட்டு கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் அடுத்த முறையும் உங்கள இதையே அடிக்கடி போட சொல்லுவார்கள். இன்று அரபிக் டீ எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்ஙள்.

Ingredients:

  • ¾ கப் பால்
  • 2 கப் தண்ணீர்
  • 1 ½ tbsp டீ துள்
  • 5 ஏலக்காய்
  • 4 tbsp கண்டென்ஷ்டு மில்க்

Equipemnts:

  • 2 பால் பாத்திரம்
  • 1 பவுள்
  • 2 கப்
  • 1 அரிப்பு

Steps:

  1. முதலில் ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதிஞ் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பின்பு அதனுடன் ஒன்றரை டீஸ்பூன் டீடைல் சேர்த்து கொள்ளவும். டீ தூள் நீங்கள் எப்போதும் எந்த பிராண்ட் பயன்படுத்திவர்களோ அந்த பிராண்டு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  2. அதன் பிறகு 5 ஏலக்காயை எடுத்துக்கொண்டு நன்றாக தட்டிக் கொள்ளுங்கள் அதன் பின் டீயில் போடவும். இப்படியாக ஒரு மூன்று நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டு பின் அடுப்பபை அமைற்றி பின் அதனை ஒரு மூடியை வைத்து மூடி விடுங்கள்.
  3. அப்போதுதான் டீயின் சுவையும், மணமும் சற்று இன்னும் அதிகரிக்கும். அதன் பின்பு முக்கால் கப் பால் எடுத்துக்கொண்டு அதை இன்னொரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அன்பு பால் நன்றாக கொதித்து வந்ததும் தீயை குறைத்து நான்கு நிமிடங்கள் நன்கு கொதிக்க விட்டுக் கொள்ளுங்கள்.
  4. அதன் பிறகு இந்த டீக்கு சர்க்கரை பயன்படுத்தாமல் அதற்கு பதிலாக கண்டென்ஷ்டு மில்க் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில்நான்கு டீஸ்பூன் கன்டென்ஸடு சேர்த்து அதில் நாம் கொதிக்க வைத்த பாலை ஆடை இல்லாமல் வடிகட்டி ஊற்றிக் கொள்ளுங்கள்.
  5. பின்பு அதன் மேல் டீயையும் வடிகட்டி இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் டீயை இரண்டு மூன்று முறை நன்றாக ஆற்றிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையும் மணமும் நிறைந்த திடமான டீ இனிதே தயாராகிவிட்டது.