மணமணக்கும் வெந்தய குழம்பு இப்படி செய்து! சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க!

Summary: சுட சுட சாதத்தோடு இந்த வெந்தயக் குழம்பு செய்து கொடுங்கள். ஆரோக்கியத்தை கொடுக்கும், வயிற்றை சீர் செய்யும். வயிற்றுக்குள் ஏதாவது உபாதைகள் இருந்தாலும் அதை சரி செய்து விடும். கோடைக்காலத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும் அல்லவா. இப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சரி செய்யும் சக்தி இந்த வெந்தயக் குழம்புக்கு உள்ளது. உடலுக்கு குளிர்ச்சியும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் ஒரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிடுவது நல்ல பலன்களைத் தரும். இரண்டு பேருக்கு தேவையான வெந்தயக் குழம்பு செய்வதற்கான வழி முறை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை.

Ingredients:

  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1/2 Tbsp வெந்தயம்
  • 1 Tbsp மிளகாய் தூள்
  • 2 Tbsp தனியா தூள்
  • 1/4 Tsp மஞ்சள் தூள்
  • 2 தேங்காய் சில்
  • 1 Tbsp இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு
  • 1 கொத்து கொத்த மல்லி
  • 2 Tbsp எண்ணெய்
  • 1/2 Tsp கடுகு
  • 1 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. வெந்தயத்தை பொன்னிறமாக (தீய்த்து விடக் கூடாது) வறுத்து அதனை மிக்சியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. புளியை தேவையான அளவிற்கு நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். தேங்காயை நன்கு மை போல் அரைத்துக் கொள்ளவும். பின் குழம்பு வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாத்திரம் காய்ந்ததும் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளிக்கவும்.
  3. பின் கடுகு பொறிந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்.
  4. தக்காளி வதங்கி நன்கு மசிந்து விட வேண்டும். அதற்காக தக்காளியுடன் உப்பு போட்டு வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும். இப்போது அரைத்து வைத்திருக்கும் தேங்காயையும் அதில் சேர்த்து வதக்கவும்.
  5. பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம், தக்காளி எல்லாம் மசாலாவுடன் சேர்ந்து நன்கு வதங்கியதும் புளிக் கரைசலை கொட்டி கொதிக்கவிடவும்.
  6. குழம்பு நன்கு கொதித்து சுண்டிய நிலையில் அரை தேக்கரண்டி வெந்தயத் தூளை சேர்த்து கொதிக்க விடவும். வெந்தயத் தூளை அதிகமாக சேர்த்து விடவும் கூடாது, குழம்பு அதிகமாக கொதித்து விடவும் கூடாது.
  7. ஏனெனில் குழம்பு கசந்து விடும். எனவே குழம்பை இறக்குவதற்கு 5 நிமிட நேரத்திற்கு முன்பு வெந்தயத் தூளை போட்டு கொதிக்க விட்டு கறிவேப்பிலை, கொத்துமல்லியைத் தூவி இறக்கவும். சுவையான வெந்தயக் குழம்பு தயார்