சேனைக்கிழங்கு தோரன் கூட்டு இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட ஏற்றது!

Summary: கிழங்குகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். அதில் பெரும்பாலானோருக்கு உருளைக்கிழங்கு தான் பிடிக்கும். அதேப் போல் சேனைக்கிழங்கிழங்கின் சுவைக்கும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சேனைக்கிழங்கை பொரியல் செய்து சாப்பிட்டால், அதன் சுவையே அலாதியானது. ஒரு மாறுதலுக்கு சேனை தோரன் செய்து பாருங்கள். தோரன் தேங்காய் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்து வதக்கி, வேகவைத்த அரிசியுடன் ஒரு பக்கமாக பரிமாறப்படுகிறது! இதை செய்வது மிகவும் எளிமையானது, ஆனால் மிகவும் சுவையாக இருக்கும்.

Ingredients:

  • 1/2 கிலோ சேனைக்கிழங்கு
  • 1/4 கப் தேங்காய்
  • 2 வர மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு, உளுந்த பருப்பு
  • உப்பு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் சேனை கிழங்கை அதின் தோலை நீக்கி பிறகு நன்கு கழுகி சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. பின்னர் மிக்ஸியில் தேங்காய், மிளகாய், சீரகம் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்து அத்துடன் சேனை கிழங்கு, மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேக விடவும்.
  4. நன்கு வெந்ததும் அத்துடன் அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  5. பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி மேலாக ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி விடவும்.
  6. அருமையான சுவையுடன் கூடிய சேனை கிழங்கு தோரன் தயார். சாம்பார் சாதத்துடன் சேர்த்து தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.