சாஸ் எதுவும் இல்லாமலேயே சில்லி சீஸ் டோஸ்ட் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுலபமாக செய்திட முடியும்.

Summary: காலை மற்றும் மாலை வேளையில் சற்று வித்தியாசமாக இந்த சில்லி சீஸ் டோஸ்ட் செய்து பார்க்கலாமே! இப்பொழுதெல்லாம் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களென்றால் பிரட் டோஸ்ட், பானிபூரி, சென்னா மசாலா இதுபோன்ற சாட் உணவுகள் தான். வீட்டில் இருக்கக் கூடிய சில பொருட்களை வைத்தும் சுவையான சில்லி சீஸ் டோஸ்ட் சுலபமாக செய்திட முடியும். இதை ஒரு முறை செய்துகொடுத்து பாருங்கள். மீண்டும் பிரட் டோஸ்ட் செய்து கொடுங்கள் என்று குழந்தைகள் உங்களைத்தொல்லை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.

Ingredients:

  • 2 துண்டுகள் பிரட்
  • 3 டேபிள் ஸ்பூன் சீஸ்
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் பச்சை குடைமிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள்

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் ஒரு பௌலில் பச்சை மிளகாய், குடைமிளகாய், துருவிய சீஸ், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  2. பின் பிரட் துண்டுகளை தோசைக்கல்லில் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  3. பின்பு பிரட் துண்டுகளின் ஒரு பக்கத்தின் மேல் அந்த கலவையை பரப்பி, மீண்டும் தோசைக்கல்லில் வைத்து சீஸ் உருகும் வரை வேக விடவும். இப்போது சுவையான சில்லி சீஸ் டோஸ்ட் ரெடி!!!