கன்னியாகுமரி ஸ்பெஷல் சுவையான முந்திரி கொத்து இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: கன்னியாகுமரி செய்யப்படும் சுவையான செய்யப்பட்ட ஒரு இனிப்பு பொருளாகும் இது திருவிழா காலங்களில் அங்கு செய்யப்படும் மிகவும் சிறப்பான சுவையான தித்திக்கும் அறுசுவை மிகுந்த ஒரு இனிப்பு பொருளாகும் இதனை கன்னியாகுமரி சென்று தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை எளிமையாக செய்யக்கூடிய இதனை நாம் வீட்டிலும் செய்து சாப்பிடலாம.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான முந்திரி கொத்து செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 cup பச்சைப்பயிறு
  • 3 tbsp துருவிய தேங்காய்
  • ¾ cup வெல்லம்
  • ¼ tsp ஏலக்காய் தூள்
  • ½ cup அரிசி மாவு
  • 2 tbsp மைதா
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 3 tbsp நல்எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. முந்திரி கொத்து செய்ய முதலில் கடாயில் எண்ணெய் விடாமல் பாசிப்பயறு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பயறு பொன்னிறமாக வந்ததும் அடுப்பை ஆப் செய்து விட வேண்டும்.
  2. பின்னர் கலவையை ஆற வைக்க வேண்டும். பாசிப்பயறு ஆறிய உடன் மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பாகு இரு விரல்களில் நடுவே வைக்கும் போது பிசுபிசு என்று இருக்க வேண்டும்.
  4. அவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு,மைதா மாவு, சிறிது மஞ்சள் தூள் ஆகியவற்றை தண்ணீர் கலந்து தோசை மாவு பதம் போல் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  5. பின் ஒரு கடாயில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி உருண்டை பிடித்துள்ள கலவையை அரிசி மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.இப்பொழுது சத்தான முந்திரி கொத்து தயார்.