தித்திக்கும் சுவையில் மதுரை ஸ்பெஷல் பட்டர் பன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: மதுரை ஸ்பெஷல் சூடான சுவையான பட்டர்பன் இதனை மதுரைக்கு சென்று தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை நம் வீடுகளில் செய்து சாப்பிட்டு சுவைக்கலாம் ஒரு மாற்றாக சூடாக சுவையாக செய்யப்படும் பட்டர்பன் இது மதுரை புகழ் கொண்டது இதை சாப்பிடாமல் யாரும் இருந்ததில்லை சாப்பிட்ட பின்பு இதை இன்னொன்று என்று கேட்காமல் யாரும் இருந்ததில்லை,குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மதுரை பட்டர் பன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 4 பன்
  • 2 tbsp வெண்ணெய்
  • 2 tbsp சீனி
  • 2 tbsp நாட்டுச் சர்க்கரை
  • பால்
  • சிறிதளவு உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 தோசை கரண்டி

Steps:

  1. முதலில் வெண்ணையை சிறிது பால் கலந்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.
  2. பின் சீனியை அரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. அரைத்துக் கொண்ட சீனியை வெண்ணெய் கலவியில் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  4. பின் பன்னை நடுவில் கட் செய்து அதில் வெண்ணெய் கலவையை நன்றாக பரப்பி விட வேண்டும்.
  5. சிறிது நாட்டுச் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
  6. பிறகு தோசை கல்லில் சிறிது வெண்ணெயை போட்டு அது சூடானதும் பண்ணை இருபுறமும் திருப்பி எடுத்து வேக விட வேண்டும்.
  7. இப்பொழுது சூடான மதுரை பட்டர் பன் தயார்.