மணமணக்கும் கிராமத்து மட்டன் நுரையீரல் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: அசைவ பிரியர்களுக்கு ஏற்ற ஒரு நுரையீரல் பொரியல் இது.. ட்ரையாக வறுத்து செய்து சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம். பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கு சலிப்புதான் ஏற்படும் ஆனால் ஆட்டின் கறியை தவிர ஆட்டில் உள்ள உடல் உறுப்புகளும் சுவையாகவும் இருக்கும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் வகையில் இருக்கும் . ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நுரையீரல் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 நுரையீரல்
  • 1 tsp மிளகாய்தூள்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • ½ tsp மஞ்சள்தூள்
  • 1 tsp கடுகு
  • 1 tsp மசாலாத்தூள்
  • 11 கறிவேப்பிலை
  • 1 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு தண்ணீர்
  • 3 tbsp நல்எண்ணெய்

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. நுரையீரல் பொரியல் செய்ய முதலில் நுரையீரலை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.கடாயில் நுரையீரலை போட்டு கரம் மசாலாத்தூள், உப்பு போட்டு 2 குவளை தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.
  2. பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை,வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு பொரிய விட்டு மிளகாய்தூள், மஞ்சள்தூள் போட்டு கிளறி வேகவைத்த நுரையீரலை போட்டு நன்கு கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி சேர்ந்தால் போல் வந்ததும் அடுப்பை அணைக்கவும். சுவையான நுரையீரல் பொரியல் ரெடி.