சுட சுட செட்டிநாடு வெண்டைக்காய் சாதம் இப்படி செய்து பாருங்க!

Summary: இன்று செட்டிநாடு வெணடைக்காய் சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த செட்டிநாடு வெண்டைக்காய் சாதத்தை செய்து கொடுத்தால் நீங்கள் கொடுத்துவிட்ட டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும். அது மட்டும் இல்லாமல் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த வெண்டைக்காய் சாதம் அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்த முறையும் உங்களையும் இது போல் செய்து தரச் சொல்லி உங்களிடம் கேட்பார்கள்.

Ingredients:

  • 2 கப் சாதம்
  • 100 கிராம் வெண்டைக்காய்
  • 1 tbsp புளி கரைசல்
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகு தூள்
  • 1 tsp கடலை பருப்பு
  • 8 முந்திரி பருப்பு
  • 1  tbsp எண்ணெய்
  • 1 tsp கடுகு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் வெங்காயம், வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  2. அதன் பின்பு வெங்காயம் பொன்னிறமாக நன்றாக வதங்கியதும் பின்பு வெண்டைக்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தீயை மிதமாக ஏறிய விட்டு பத்து நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.
  3. பின் வெண்டைக்காய வெந்ததும் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பட்டை பொடி, மிளகுத்தூள், உப்பு, கெட்டியான புளிக்கரைசல் சேர்த்து வெண்டைக்காயை நன்றாக கிளறி விட்டு வேக வைக்கவும்.
  4. பின் மற்றொரு கடாயை எடுத்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, முந்திரி இட்டு பொரிந்ததும் அதில் வெண்டைக்காயை கலவையைச் சேர்க்கவும். அதனுடன், வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  5. குறைவான தீயில் 5 நிமிடங்கள் கிளறி விட்டு உப்பு சரிபார்த்து அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு வெண்டைக்காய் சாதம் தயார்.