அருமையான சுவையில் ஆட்டு மூளைப் பொடிமாஸ்!!!!

Summary: எப்போதும் மட்டன் கறி சமைப்பதை விட , ஆட்டு ஈரல்,மூளை போன்றவை செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.அப்படி இந்த ஆட்டு மூளை பொடிமாஸ் ஒரு முறை செய்து வீட்டில் உள்ள அனைவருக்கும் குடுத்து பாருங்கள். அத்தனை பாராட்டும் உங்களுக்கு தான். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Ingredients:

  • 1 ஆட்டின் மூளை
  • 1 தே‌க்கர‌ண்டி மஞ்சள்
  • 5 வெங்காயம்
  • 10 ப‌ல்லு பூண்டு
  • 2 தே‌க்கர‌ண்டி மிளகாய் தூ‌ள்
  • 2 தே‌க்கர‌ண்டி எ‌ண்ணெ‌ய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. ஆட்டின் மூளையை சுத்தம் செய்து ஒரு ‌சி‌ட்டிகை மஞ்ச‌ள் தூளை அதன் மேல் தடவித் தண்ணீரில் போட்டு, அடுப்பில் வைத்து வேகவிடவும். வெந்ததும் அதை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டுப் பத்து நிமிடத்துக்குப் பிறகு மூளை மீது இருக்கும் ஜவ்வை அகற்றி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. இர‌ண்டு வெ‌ங்காய‌ம்,5 ப‌ல் பூ‌ண்டை மைய அரை‌‌க்கவு‌ம். ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் மூளையை‌ப் போ‌ட்டு அ‌தி‌ல் தேவையானஅளவு உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள்,‌மிளகா‌ய் தூ‌ள், அரை‌த்த ‌விழுதை‌ப் போ‌ட்டு‌‌ பிச‌றி வை‌க்கவு‌ம்.
  3. வெ‌ங்காய‌த்தையு‌ம், பூ‌ண்டையு‌ம் தோ‌ல் ‌உ‌ரி‌த்து நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம். பிறகு அடுப்பில் வாண‌‌லி வை‌த்து எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி காய்ந்ததும், வெங்காயம், பூ‌ண்டை‌ப் போ‌ட்டு வத‌க்கவு‌ம்.