நாவில் எச்சி ஊறும் சுவையான காய்கறி ஆம்லெட் செய்வது எப்படி ?

Summary: பெரும்பாலும் அவித்த முட்டையை யாரும் விரும்ப மாட்டார்கள். அதற்கு மாறாக ஆம்லெட், ஆப்ஆயில், கலக்கி என்று முட்டையை பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவுகளை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இன்று முட்டையை வைத்து நாம் இன்று காய்கறி ஆம்லெட் தயார் செய்ய போகிறோம்.ஆம், இன்று ஆரோகியமான காய்கறி ஆம்லெட் பற்றிதான் பார்க்க போகிறோம் இந்த முறையில் காய்கறி ஆம்லெட் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். அதனால் காய்கறி ஆம்லெட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 4 முட்டை
  • 3 tbsp எண்ணெய்
  • 1 உருளை கிழங்கு
  • 1 கேரட்
  • 1 குடை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • ¼ tbsp மிளகாய் தூள்
  • உப்பு
  • மிளகு தூள்
  • 1 கைப்பிடி கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் நாம் எடுத்துக் கொண்ட காய்கறிகளை நன்றாக கழுவிக்கொண்டு. உருளைக்கிழங்கின் மேற்புற தோலையும் சீவி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். பின் கேரட்டை நீள வாக்கில் சிறு சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
  2. பின் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளுங்கள், பின் குடைமிளகாய் தண்டை நீக்கிவிட்டு நறுக்கிக் கொள்ளுங்கள். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும, உருளைக்கிழங்கு வெங்காயம் மற்றும் குடைமிளகாய் இந்த மூன்று காய்கறிகளும் சேரத்து நன்கு வதக்கவும்.
  3. உருளைக்கிழங்கு நன்கு வெந்து வந்ததும் இதனுடன் நாம் நீள் வாக்கில் நறுக்கி வைத்திருக்கும் கேரட்டையும் இதனுடன் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின் சிறிது அளவு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி கொண்டு, பின் கடாயை இறக்கி வைத்து விடுங்கள்.
  4. அதன் பின்பு ஒரு பெரிய பவுளில் நான்கு முட்டை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.
  5. பின்பு இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், நறுக்கி வைத்திருக்கும் ஒரு கைப்பிடி மல்லி இலை மற்றும் நாம் வதக்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
  6. அதன் பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஆம்லெட்டை அடுப்பில் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் காய்கறி ஆம்லெட் இனிதே தயாராகிவிட்டது.
  7. நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தீர்கள் என்றால் இரண்டு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சேர்த்து கொண்டு மஞ்சள் கருவை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள் அப்பொழுது குறைந்த கலோரிகள் மட்டும் கிடைக்கும்.