மணக்க மணக்க நெல்லித் துவையல், இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

Summary: நெல்லித்துவையல் இப்படி மட்டும் செய்து சாப்பிட்டால் நிறைய நற்பலன்கள் பெறலாம். உடம்பில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க கூடிய சில உணவு வகைகளில் நெல்லிக்காயும் ஒன்று. ரொம்ப டேஸ்ட்டியாக மற்றும் ஆரோக்கியம் நிறைந்துள்ள இந்த நெல்லித் துவையல் இட்லி, தோசை, சப்பாத்தி மட்டுமல்லாமல் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியம் பலம் பெறும். இந்த நெல்லித் துவையல் எப்படி எளிதாக அரைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ளப் போகிறோம்.

Ingredients:

  • 1 கப் நெல்லிக்காய்
  • 1 துண்டு பெருங்காயம்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • உப்பு
  • எண்ணெய்
  • வற்றல்
  • 1/2 கப் உளுந்தம்பருப்பு

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. நெல்லிக்காயிலிருந்து கொட்டைகளை நீக்கி விடவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும். உளுந்தம் பருப்பு, வற்றல் போட்டு சிவந்ததும் இறக்கவும்.
  2. நெல்லிக்காயையும் தனியே வதக்கி, முதலில் நெல்லிக்காயை அரைத்துக் கொண்டு அத்துடன் உப்பு உளுந்தம் பருப்பு, வற்றல், காயம் சேர்த்து அரைக்கவும்.
  3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை போட்டு இந்த விழுதையும் சேர்த்துப் போட்டு கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.