இரவு உணவுக்கு ருசியான வெள்ளரிக்காய் சப்பாத்தி வீட்டில் இப்படி செய்து அசத்துங்கள்!

Summary: கோதுமை மாவில் எப்போதும் போல் சுடும் சப்பாத்தியை சாப்பிட்டு சாப்பிட்டு நாவுக்கு ருசியாக கேட்கிறதா..? ஆனாலும் டயட் முறைகளை பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறதா.? கவலையை விடுங்கள். உங்களின் இரண்டு தேவைகளையும் நிவர்த்தி செய்யும் விதமாக இப்படி வித்தியாசமான முறையில் சப்பாத்தி சுட்டு பாருங்கள். அப்புறம் அடிக்கடி செய்வீர்கள். நம்மில் பெரும்பாலானோருக்கு பிடித்த உணவுகளில் ஒன்றாக சப்பாத்தி உள்ளது. அந்த மாதிரியான வித்தியாசமான வெள்ளரி சப்பாத்திகளை எப்படி தயார் செய்து ருசிக்கலாம் என்று இங்கு பார்ப்போம்.

Ingredients:

  • 1 வெள்ளரிக்காய்
  • 3 கப் கோதுமை
  • 2 மிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் ஓமம்
  • உப்பு
  • 2 டீஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 தோசை கரண்டி
  • 1 தோசை கல்

Steps:

  1. வெள்ளரிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மையாக அரைத்து வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதுடன், உப்பு, ஓமம் மற்றும் மாவு கலந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து விடவும்.
  3. வெள்ளரிக்காயின் தண்ணீர் மாவு பிசைய போதுமானதாக இருக்கும்.காயின் தண்ணீருக்கு ஏற்ப மாவு கூட்டி சேர்த்து நன்கு பிசையவும்.
  4. பின்னர் மாவில் எண்ணெய் விட்டு 10நிமிடங்களுக்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  5. பிசைந்த மாவு காயாமல் இருக்க லேசாக எண்ணெய் தடவி மூடி 1மணி நேரம் ஊற விடவும்.
  6. பின் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, உருண்டைகளின் மேல் மாவு தூவி வட்டங்களாக விரிக்கவும்.
  7. அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் விரித்த வட்டங்கள் சேர்த்து தேவைக்கு எண்ணெய் சேர்த்து இரு புறங்களிலும் வேக வைத்து எடுக்கவும்.
  8. அவ்வளவுதான். சுவையான, வெள்ளரிக்காய் மணத்துடன் சப்பாத்தி ரெடி. இது எல்லா குருமா, கிரேவிகளும் பொருத்தமாக இருக்கும்.