குக் வித் கோமாளி தர்பூசணி துளசி ரசம் இப்படி செய்து பாருங்க! புது விதமான சுவையில்!

Summary: தென்னிந்திய மதிய உணவு மெனுவில் ரசம் முக்கிய உணவுகளில் ஒன்றாகும். நம் வாழ்வில் விதவிதமான ரசத்தை உணவில் சேர்த்திருப்போம் ஆனால் தர்பூசணி ரசம் ரெசிபி ஒரு வித்தியாசமான ரெசிபி. தர்பூசணி ஒரு அற்புதமான கோடை பழம் மற்றும் இந்த ரசம் ரெசிபி உங்கள் சமையலறையில் இந்த பருவத்தில் முயற்சிக்க வேண்டும். இந்த தர்பூசணி ரசம் லேசான இனிப்பு, காரமான மற்றும் புளிப்பு சுவை கொண்டது. இது எளிதானது மற்றும் உங்கள் தென்னிந்திய உணவுகளுடன் சேர்த்து மகிழலாம். இது அருந்துவதற்கு அருமையாக இருக்கும், மேலும் இதை தயாரிக்க குறைவான பொருட்கள் தேவைப்படுகின்றன.

Ingredients:

  • 1 கப் தர்பூசணி
  • 1 தக்காளி
  • 6 துளசி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • எண்ணெய்
  • 1 டீஸ்பூன் நெய்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 தட்டு
  • 1 கடாய்

Steps:

  1. தர்பூசணியை சுத்தம் செய்து, அதன் தோலை நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. மிக்ஸி ஜாரில் நறுக்கிய தர்பூசணி, தக்காளி மற்றும் துளசி இலை சேர்த்து நன்கு அரைத்து பௌலில் வடிகட்டிக் கொள்ளவும்.
  3. பின் அடுப்பில் கடாயை வைத்து சீரகம் மற்றும் மிளகு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து அரைத்து கொள்ளவும்.
  4. பின்னர் அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  5. பின் நாம் அரைத்து வைத்திருக்கும் தர்பூசணி சாறை சேர்த்து கலந்து விடவும். அதில் மஞ்சள் தூள், பெருங்காயம், அரைத்து மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  6. ரசம் நன்கு கொதித்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
  7. பின்னர் ரசத்தை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும்.
  8. பின்னர் மீதம் உள்ள தர்பூசணி பழத்தில் ஒரு சிறிய குழி கரண்டியால் ஸ்கூப் செய்து தர்பூசணியை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  9. பின்னர் ஒரு சூடான கரி துண்டின் மீது நெய் விட்டு தர்பூசணி தட்டில் வைத்து ஒரு பாத்திரத்தால் 5 நிமிடங்களுக்கு மூடி விடவும்.
  10. 5 நிமிடங்கள் கழித்து தர்பூசணி துண்டுகளை ரசக் கலவையில் சேர்த்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  11. அவ்வளவுதான் இப்போது வித்தியாசமான, சுவையான தர்பூசணி துளசி ரசம் தயார். இதனை சூப்பாகவும் சுடசுட குடிக்கலாம்.