ரோட்டு ஓரம் இட்லி கடையின் மணமணக்கும் சுவையான சாம்பார் வைப்பது எப்படி ?

Summary: ரோட்டு கடைகளில் செய்யப்படும் சாம்பார்களில் காய்கறி கூட அவ்வளவாக சேர்க்க மாட்டார்கள். இருந்தாலும் அவர்கள் வைக்கும் சாம்பாரின் மணமும், சுவையும் அட்டகாசமான முறையில் இருக்கும் வாங்கி டம்ளர் டம்ளராக குடிக்க வேண்டும் என்ற அளவிற்கு நமக்கே தோணும். ஆம் இன்று ரோட்டு கடைகளில் எப்படி சாம்பார் வைக்கிறார்கள் என்று தான் பார்க்க இருக்கிறோம். இதுபோன்று நீங்களும் உங்கள் டிபனின் போது இதே மாதிரியாக சாம்பார் வைத்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் சுவைத்து சுவைத்து சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • ½ கப் துவரம் பருப்பு
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp நெய்
  • 1 tbsp கடுகு
  • ½ tbsp சோம்பு
  • கருவேப்பிலை
  • 2 வர மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 தக்காளி
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 2 tbsp சாம்பார் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • புளி
  • 3 கப் தண்ணீர்
  • உப்பு
  • 1 tbsp நெய்
  • ½ tbsp  வெல்லம்
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஒரு பவுளில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக ஒரு 15 நிமிடம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  2. எண்ணெய் நன்கு சூடேறியதும் கடுகு, சோம்பு, சிறிது கருவேப்பிலை, வர மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள் வெங்காயம் பொன்னிறமாக வரும் முறை வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதனுடன் நறுக்கிய தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் தக்காளி நன்றாக மசிந்து வந்ததும் அதனோடு மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். சேர்த்த மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும்.
  4. பின் அதனுடன் நாம் ஊறவைத்த புளியை கரைத்து அந்த தண்ணீரை இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். பின் 20 நிமிடம் ஊற வைத்த துவரம் பருப்பையும் இதனுடன் சேர்த்து மற்றும் இரண்டு கப் தண்ணீரும் சேர்த்து குக்கரை மூடி விடுங்கள்.
  5. குக்கரில் நான்கு விசில் வந்ததும் குக்கரின் பிரஷரை ரிலீஸ் செய்து மூடியை திறந்து கொள்ளுங்கள் பின்பு பருப்பை நன்றாக மசித்து விட்டு அதனுடன் இன்னும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் அரை டீஸ்பூன் துருவிய வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொதிக்க வையுங்கள்.
  6. அதன் பின் சாம்பார் நன்றாக கொதித்து வந்ததும் சிறிது கொத்த மல்லி இலையை சேர்த்து சாம்பார் வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் ரோட்டு கடை சாம்பார் இனிதே தயாராகிவிட்டது.