ருசியான மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்து பரோட்டா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: கொத்து பரோட்டா தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு உணவு வகை அதுவும் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு. தமிழகத்தில் உள்ள மதுரையை பிறப்பிடமாகக் கொண்ட இவை கேரளாவில் வீச்சு பரோட்டா என்று அழைக்கப்படுகிறது. என்ன தான் தமிழகம் முழுவதும் கொத்து பரோட்டா பிரபலமாக இருந்தாலும் மதுரை மாவட்டத்தில் இதற்கு இருக்கும் மவுசே தனி. கொத்து பரோட்டாவின் ஸ்பெஷல் என்ன என்றால் வெறும் 3 பரோட்டாக்கள் மற்றும் முந்தைய நாள் செய்த மீதமுள்ள சிக்கன் துண்டுகள் இருந்தால் போதும் இதை மிக எளிதாக செய்து விடலாம்.

Ingredients:

  • 8 பரோட்டா
  • 1 கப் சிக்கன் கிரேவி
  • 400 கிராம் பொரித்த சிக்கன்
  • 4 முட்டை
  • 200 கிராம் நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  • உப்பு
  • 1 கப் நறுக்கிய தக்காளி
  • 1/4 கப் எண்ணெய்
  • உப்பு
  • 1/2 கப் நறுக்கிய கொத்தமல்லி

Equipemnts:

  • 1 வாணலி
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் பரோட்டாவை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வெங்காயம் வெந்ததும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் இதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கெட்டியானதும், சிக்கனை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  5. பின்னர் சிக்கன் க்ரேவி சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் பரோட்டா சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. இதில் மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் கொத்து பரோட்டா தயார்.