கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் சுக்கா இப்படி செய்து பாருங்க! மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும் சுவையில்!

Summary: உணவு என்றாலே எல்லோரும் மிகவும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை ருசிக்க வேண்டும் என பலரும் விரும்புவர். ஒவ்வொரு ஊருக்கும் தனிச்சிறப்பு உண்டு. உடை, உணவு, என பன்முகத் தன்மை உண்டு. அந்தவகையில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமத்து உணவுகள் பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. வித்தியாசமான, ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தனர். அந்தவகையில் கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் சுக்கா செய்வது குறித்து இங்கு பார்ப்போம். இதை இட்லி, தோசை, பரோட்டா என டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிடலாம். அப்படியில்லை என்றால் பிரியாணி, குஸ்கா, வெறும் சோறு என சாப்பாட்டுக்கும் வைத்து சாப்பிடலாம்.

Ingredients:

  • 1/2 கிலோ கத்தரிக்காய்
  • 1 பெரிய
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் கரம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 ககரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. கத்தரிக்காயை கழுவி நீள வாக்கில் நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  2. கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  3. பின்னர் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.
  4. கத்தரிக்காய் வதங்கியதும் அத்துடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. இரண்டு நிமிடங்கள் வதக்கியவுடன் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  6. பின்னர் எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான கத்தரிக்காய் சுக்கா தயார்.