செட்டிநாடு தக்காளிக்காய் பச்சடி, இப்படி செஞ்சு பாருங்க, ஒரு குன்டான் சாதம் இருந்தாலும் பத்தாது!

Summary: தக்காளிக்காய் வைத்து இப்படி செட்டிநாடு தக்காளிக்காய் பச்சடி செய்து அசத்தலாம். சூடான சாதத்துடன் மட்டுமல்லாமல்தக்காளிக்காய் பச்சடி   தோசை, இட்லிக்கு கூட தொட்டுக் கொள்ள சுவையாகஇருக்கும் இந்த செட்டிநாடு தக்காளிக்காய் பச்சடி செட்டிநாட்டில் விசேஷமாக செய்வது உண்டு. தக்காளிக்காய்க்குப்பதில் தக்காளிப்பழம் சேர்த்தும் செய்யலாம். இந்த ஸ்பெஷல் செட்டிநாடு தக்காளிக்காய்பச்சடி நாமும் எப்படி வீட்டிலேயே எளிதாக செய்வது?என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Ingredients:

  • 200 கிராம் தக்காளிக்காய்
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 8 சின்ன வெங்காயம்
  • 4 பச்சைமிளகாய்
  • புளி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • உப்பு
  • 1/4 டேபிள்ஸ்பூன் கடுகு
  • 1/4 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1/2 டேபிள்ஸ்பூன் சோம்பு
  • 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. துவரம் பருப்புடன்,மஞ்சள்தூளை சேர்த்து, (துவரம்பருப்பு கரையாமல்) 2 விசில் வரும் வரைவேகவையுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள், பச்சை மிளகாயை சிறியதுண்டுகளாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளுங்கள்.
  2. எண்ணெய் காய்ந்ததுமகடுகு, உளுத்தம்பருப்பு,சோம்பு சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய்சேருங்கள். சிறிது வதங்கியதும் தக்காளிக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
  3. பிறகு புளிக்கரைசலைசேருங்கள். மிதமான தீயில் 5 நிமிடம் கொதித்ததும், பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.